நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
மிஸ் தமிழ்நாடு, மிஸ்சஸ் தமிழ்நாடு, சவுத் இந்தியா ஆகிய நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான ஜோ மைக்கேல் ப்ரவீன், பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் இதுகுறித்து அவர் எழுதிய பதிவில், வெளிநாடு வாழ் பெண் ஒருவரிடம் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் முருகதாஸ் சேர்ந்து 15 லட்சம் வரை சிறிது சிறிதாக பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கேட்டபோது அந்த பெண்ணை அநாகரீகமான வார்த்தைகள் பேசி திட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் ஜோ மைக்கேல் ப்ரவீனை அனுகி ஆதாரத்தை கொடுத்து உதவி கேட்டுள்ளார். அவரும் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை விரிவாக எழுதி, பாலாஜி முருகதாஸ் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டும் ஆடியோவையும் ரிலீஸ் செய்துள்ளார். தவிரவும் சட்ட ரீதியான உதவியை அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும் முதலில் தைரியமாக புகார் அளித்த அந்த பெண் தற்போது பின்வாங்குவதாகவும், அவரை சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளதாகவும் ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸ் குறித்த இந்த குற்றச்சாட்டானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.