சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அசீம் தொடர்ந்து ஊடகங்களில் பிசியாக பேட்டிக் கொடுத்து வருகிறார். அசீம் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே அவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்ற விமர்சனம் ஆரம்பம் முதலே கசிந்து வந்தது. அசீமும் தமிழ் மீதான பற்று குறித்து பேசினாரே தவிர எந்தவொரு இடத்திலும் தன்னை நாம் தமிழர் கட்சி உறுப்பினராக காட்டிக் கொண்டதில்லை. அதேபோல் விக்ரமனுக்கு கிடைத்தது போல் அசீமுக்கு எந்தவொரு அரசியல் கட்சியும் ஆதரவு தரவிவில்லை.
இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடனான சந்திப்பை சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தியுள்ளது. அதில் கலந்து கொண்டுள்ள அசீம், சீமானை பாசத்துடன் கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, 'கொள்கை, கோட்பாடு, தத்துவத்தையெல்லாம் தாண்டிய உறவிது!! என்றும் அண்ணன் சீமானின் அன்பு தம்பி தான் நான்' என பதிவிட்டுள்ளார்.