‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் அறிமுகமாகி தமிழ் சின்னத்திரை கதாநாயகிகள் பட்டியலில் டாப் இடத்தை பிடித்தவர் ஷபானா. கேரளாவை சேர்ந்த ஷபானா சீரியல் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சில நாட்களில் செம்பருத்தி சீரியலும் முடிந்துவிட ஷபானாவின் அடுத்த சீரியல் என்னவென்று ரசிகர்கள் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். அந்த ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஷபானா நடிக்கும் புதிய சீரியலின் புரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் டிவி ஒன்றில் மிஸ்டர்.மனைவி என்ற தொடரில் தான் ஷபானா ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். செம்பருத்தி தொடரில் அமைதியான பொறுப்புள்ள நடிகையாக மனம் கவர்ந்த ஷபானா, இந்த தொடரில் மாறுப்பட்ட கோணத்தில் துள்ளலான நடிப்பில் கலக்கவுள்ளார். ஷபானாவுக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா என்ற தெலுங்கு சின்னத்திரை நடிகர் நடிக்கிறார்.