நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது |
தந்தை - மகள் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் கண்ணான கண்ணே. பப்லு என்ற பிருத்விராஜ், நிமேஷிகா ராதாகிருஷ்ணன், ராகுல் ரவி, அக்ஷிதா போபைய்யா, மானஸ் சவாளி, ப்ரியா பிரின்ஸ் என பல முன்ன்ணி நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சில தினங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கண்ணான கண்ணே தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சில புகைப்படங்களை அந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். வருகிற மார்ச் முதல் வாரத்தில் கண்ணான கண்ணே தொடரின் கிளைமாக்ஸ் எபிசோடு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 700 எபிசோடுகளை மட்டுமே கடந்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் விரைவிலேயே முடிவுக்கு வருவதால் ரசிகர்களில் சிலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.