ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்பாக வெளிவந்தது பொன்னியின் செல்வன். கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று புதினத்தை மணிரத்னம் திரையில் கொண்டு வந்தார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது, பெரிய வரவேற்பையும், வசூலையும் குவித்தது. தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்புகிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், லால், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.