லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராம், ஆயிஷா, ஜனனி, அசீம், கதிர், ஏடிகே ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிப்பார். ஆனால், இந்த வாரம் சனிக்கிழமையன்றே எலிமினேட் செய்யப்படும் அந்த இரண்டு நபர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராம் மற்றும் ஆயிஷா தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராமின் எவிக்சனை கூட மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் ஆரம்பம் முதலே ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், ஆயிஷா சமீபத்திய எபிசோடுகளில் நன்றாக தான் விளையாடினார். மேலும், ஜனனி போன்ற ஆயிஷாவையும் விட குறைவான பெர்பாமன்ஸ் உள்ள நபர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். எனவே, இது உண்மையில் மக்களின் தீர்ப்பல்ல. பிக்பாஸின் தன்னிச்சையான முடிவு என பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.