ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
டிவி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி, விஜய் டிவியின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவர் நடித்த சீரியல்கள் அனைத்துமே பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வெள்ளித்திரையிலும் 2015ம் ஆண்டிலேயே 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில், புதிய வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த சரண்யா தற்போது தனது ரூட்டை மாற்றி பைக் ரைடராக மாறியுள்ளார். ஒரு புரொபஷனல் ரைடர் போல உடுப்புகளை மாட்டிக்கொண்டு பிஎம்டபிள்யூ, ராயல் என்பீல்டு காண்டினெண்டல் என உயர்ரக பைக்குகளில் ஊர் ஊராக டூரிங் சென்று கொண்டிருக்கிறார். சரண்யாவை திரையில் பார்க்கமுடியாத ரசிகர்கள் பலரும் 'இனி நடிக்க வரமாட்டீங்களா?' என ஏக்கத்துடன் அவரை கேட்டு வருகின்றனர்.