ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தனித்துவமான நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எப்போதுமே ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் வேறெந்த சேனலும் பாடலுக்கான ஒரு நிகழ்ச்சியை இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியதில்லை. அந்த சாதனையில் தற்போது மேலும் ஒரு மைல்கல்லாக ரசிகர்களின் பேராதரவுடன் விஜய் டிவி தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 9-ஐ இன்று(நவ., 19) முதல் ஒளிபரப்ப உள்ளது.
சூப்பர் சிங்கர் சீசன் 9, 20 போட்டியாளர்களுடன் தொடங்க இருக்கிறது. போட்டியாளர்களின் திறமைகேற்ப 'சூப்பர் 5 ஸோன்', 'சூப்பர் 3 ஸோன்' என அடுத்தடுத்த படிநிலைகளில் இறுதி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ப்ரியங்கா தேஷ்பாண்டே, ம.கா.பா ஆனந்த் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். சூப்பர் சிங்கர் சீசன் 9-க்கான ஆடிஷன்கள் ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் வருகிற சனிக்கிழமை முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.




