கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்றவர் பூவையார். அதன் பின்னர் விஜய் நடித்த பிகில், மாஸ்டர் மற்றும் விக்ரம் நடித்த கோப்ரா உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். திரைப்படங்களில் பாடவும் தொடங்கினார்.
இந்த நிலையில் தற்போது பூவையார் சொந்த கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் உள்ள பூவையாரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரைவிங் லைசென்சுக்கான வயது வரும் முன்பே பூவையார் கார் வாங்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் திறமை இருந்தால் சாதிக்கலாம், அதற்கான உயரத்தை அடையலாம் என்பதற்கு பூவையார் ஒரு உதாரணம் என்று நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சின்னத்திரை நிகழ்ச்சி, சினிமாவில் நடிப்பு, பாட்டு, வெளியூர் கச்சேரிகள் போன்றவற்றில் பூவையார் பிசியாகி விட்டதால் அவருக்கு கார் தேவையாக இருக்கிறது. அதற்காகவே அவர் வாங்கி உள்ளார் என்ற அவருக்கு நெருக்கடமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.