அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா |
பிக்பாஸ் சீசன் 6 இன்று (அக்டோபர் 9ம் தேதி) முதல் தொடங்கவுள்ளது. யார் யார் போட்டியில் கலந்து கொள்ளப்போகிறார்கள்? என்ன சண்டை வெடிக்கப்போகிறது? இந்த முறை யார் காதல் ஜோடி? என நிகழ்ச்சி குறித்த ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சின்னத்திரை நடிகர் அஸீமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அஸீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே, முதல்தடவை அல்ல. சீசன் 4-லேயே அஸீம் பிக்பாஸ் வீட்டில் நுழைய இருந்தார். அதற்காக குவாரண்டைனும் சென்றார். பகல்நிலவு தொடரில் அஸீம் - ஷிவாணி காம்போ அதிகமாக ரீச் ஆனதால் அவர் அந்த சீசனில் கட்டாயம் கலந்துகொள்வார், பிக்பாஸ் வீட்டிலும் அவர்கள் காதல் கெமிஸ்ட்ரி தொடரும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அவருக்கு அந்த சீசனில் ஏனோ சில காரணங்களால் இடம் கிடைக்கவில்லை.
தொடர்ந்து சீசன் 5ன் போதும் அவர் பெயர் அடிபட்டது. ஆனால், அப்போது அஸீம் 'பூவே உனக்காக' தொடரில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போது சீசன் 6-ல் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. பூவே உனக்காக தொடரும் அண்மையில் முடிந்துவிட்ட நிலையில் புதிய ப்ராஜெக்ட் எதிலும் கமிட்டாகாத அஸீம், பிக்பாஸ் சீசன் 6-ல் என்ட்ரியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே, இருமுறை தவறவிட்ட வாய்ப்பு அஸீமுக்கு மீண்டும் தேடி வந்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை அஸீம் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா? என்பதை பார்க்க அவரது ரசிகர்களும் மற்ற பிக்பாஸ் நேயர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.