பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய அளவில் தற்போது பிஸியான நடிகையாக தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். ஹிந்தியிலும் ஒரு பக்கம் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தனுஷ் உடன் அவர் இணைந்து நடித்த குபேரா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது மைசா என்கிற படத்தில் கதையின் நாயகியாக இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ராஷ்மிகாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
அதேசமயம் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுடன் எப்போதும் அடிக்கடி உரையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ள ராஷ்மிகா, நேற்று முன் தினம் இரவு இந்த படம் குறித்த ஒரு போஸ்டரை வெளியிட்டு இதன் டைட்டில் என்னவாக இருக்கும் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். அப்படி யார் முதலில் கண்டுபிடித்து சொல்கிறார்களோ அவரை தான் நேரில் சந்திப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் நேற்று காலை படத்தின் டைட்டில் வெளியாகும் வரை ரசிகர்களால் அதை கண்டுபிடிக்க முடியாததால் ராஷ்மிகா கொடுத்த இந்த அருமையான வாய்ப்பை அவர்கள் கோட்டை விட்டனர் என்றே சொல்லலாம்.




