பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
விஜய் டிவி ஆங்கர்களில் டிடிக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் வீஜே பிரியங்கா தேஷ்பாண்டே. தற்போது 'ராஜூ வூட்ல பார்ட்டி' மற்றும் 'பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2' உள்ளிட்ட சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். ஆங்கராக நுழைந்து 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பிரியங்கா, இத்தனை ஆண்டுகளில் வேறு எந்த தொலைக்காட்சிக்காகவும் ஆங்கரிங் செய்யாமல் விஜய் டிவிக்காக மட்டுமே ஆங்கரிங் செய்து வருகிறார். அவரது இந்த வெற்றிப்பயணத்தை கொண்டாட நினைத்த தொலைக்காட்சி நிறுவனம், பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் இந்த வார எபிசோடில் பிரியங்காவுக்காக ஏராளமான சர்ப்ரைஸான கொண்டாட்டங்களை செய்துள்ளது.
இவையனைத்தும் அந்நிகழ்ச்சியின் சமீபத்திய புரோமோவில் வெளியாகியுள்ளது. அதில், பிரியங்காவிற்காக ஸ்பெஷல் வீடியோ, கேக் கட்டிங் மற்றும் நண்பர்களின் ஸ்பெஷல் என்ட்ரி என ஏகப்பட்ட ஏற்பாடுகளை தொலைக்காட்சி நிறுவனம் செய்துள்ளது. இதை பார்க்கும் பிரியங்கா சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பிரியங்காவின் ரசிகர்களும், நண்பர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.