டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சின்னத்திரையின் நயன்தாரா என பெயரெடுத்த ரச்சிதா, கலர்ஸ் தமிழ் சேனலின் 'சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது அவர் ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரியாகிறார். தேவயாணி, வீஜே பார்வதி மற்றும் அபிஷேக் சங்கர் ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் 'புதுப்புது அர்த்தங்கள்' தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் வக்கீல் ஜான்சி ராணி என்கிற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க ரச்சிதா மஹாலெட்சுமி கமிட்டாகியுள்ளார். இந்த தகவலை ரச்சிதாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் அவர் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. 'புதுப்புது அர்த்தங்கள்' தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.




