ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
சின்னத்திரை நடிகையான திவ்யா கிருஷ்ணன் அடிக்கடி காமெடி செய்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவரது ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்து பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை கோலாகலமாக கொண்டாட நம் நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள். பாரத பிரதமர் மோடி அவர்களும் வீட்டுக்கு வீடு தேசியக்கொடி ஏற்றி, இந்திய நாட்டின் புகழையும், இறையான்மையும் உலகமறிய செய்யும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வகையில், இந்திய நாட்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திவ்யா கிருஷ்ணன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் மூவர்ண தேசியக்கொடியை போல் ஜாக்கெட் அணிந்து 'தாய் மண்ணே வணக்கம்' பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார். திவ்யாவுக்கு இந்திய நாட்டின் மீது இருக்கும் காதலையும் பற்றையும் பார்த்து அனைவரும் அவரை பாராட்டி சல்யூட் அடித்து வருகின்றனர்.