அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா, ராஜா ராணி 2 சீசனில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்டது. எனவே, அவரின் ரீ என்ட்ரியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சோஷியல் மீடியாக்கள் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வரும் ஆல்யா - சஞ்சீவ் தம்பதியினர் ஆல்யாவின் கம்பேக் எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு யூ-டியூப் சேனலில் பதிலளித்துள்ளனர்.
அந்த வீடியோவில் ரசிகர்களின் கேள்விகளை சஞ்சீவ் ஆல்யாவிடம் கேட்க அதற்கு ஆல்யா பதிலளிக்கிறார். அப்போது 'பழைய ஆல்யாவ எப்போது பாக்கலாம்? எப்பதான் கம்பேக் கொடுப்பீங்க?' என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, 'ஷூட்டிங் போனா ஒழுங்க டயட் இருக்கனும். ஆன் டைம்ல தூங்கி எந்திரிக்கனும். அதனால, கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணிட்டு, நல்ல சாப்பிட்டு ஆரோக்கியமாகனும். அப்புறம் வொர்க்-அவுட் செஞ்சு ட்ரிம் ஆனதுக்கு அப்புறம் ஷூட்டிங் போகலாம்' என கூறியுள்ளார். ஆல்யாவின் இந்த பதிலால் அவர் கட்டாயம் கம்பேக் கொடுக்க போகிறார் என ரசிகர்களுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. எனவே, இந்த முறையும் 6 மாதத்திற்கு பிறகு ஆல்யா புதிய சீரியலில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.