சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சின்னத்திரையின் புதிய காதல் ஜோடியான அருண் - அர்ச்சனா தான் இன்றைய நாளின் ஹாட் டாக்ஸ். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டில் விஜய் டிவி பிரபலங்கள் அர்ச்சனாவை டாக்டர், டி என் ஏ டெஸ்ட் என கிண்டல் செய்வதும் அதற்கு அருண் வெட்கப்படுவதும் வீடியோவாக வெளியாகி வைரலானது. இருப்பினும் அருணோ, அர்ச்சனவோ இந்த காதல் சர்ச்சை குறித்து இதுநாள் வரையில் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என்றும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் எனவும் சீரியல் வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிப்பட்டு வருகிறது. எனவே, உண்மையில் இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் குழம்பி தவித்து வந்தனர்.
இந்நிலையில், அருண் - அர்ச்சனா காதலை உறுதிசெய்யும் வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாரதி கண்ணம்மா அருணும், ராஜா ராணி 2 வில்லி அர்ச்சனாவும் ஒன்றாக காருக்குள் உட்கார்ந்திருக்கின்றனர். அவர்களுடன் சீரியல் நடிகை ரித்திகாவும் அமர்ந்துள்ளார். அருண் - அர்ச்சனா காதல் விவகாரம் வெளியாகிய இத்தகைய நாட்களில் அவர்கள் ஒன்றாக சேர்ந்திருக்கும் புகைப்படம் முதன்முதலாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இருவரும் தங்கள் காதலை கிட்டத்தட்ட கன்பார்ம் செய்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.