பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சின்னத்திரை நடிகையான ஹேமா ராஜ்குமார் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் மீனா என்கிற க்ரே ஷேட் ரோலில் அசத்தலாக நடித்து பிரபலமாகியுள்ளார். ஹேமா வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருந்தாலும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் தான் அவருக்கு பெரிய பிரேக்கை தந்தது. சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹேமாவுக்கு பாலோயர்களும் ஏராளமாக உள்ளனர். தற்போது ஹேமா ஹாஸ்பிட்டலில் சிகிச்சை எடுப்பது போல் ஒரு புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் கவலையடைந்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆயிற்று? என போன், டெக்ஸ்ட் செய்து விசாரித்துள்ளனர். எனவே, தன் ரசிகர்களின் கவலைக்கு பதில் அளிக்கும் வகையில் அண்மையில் ஒரு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், 'எனக்கு சில மாதங்களாக கழுத்துக்கு அருகில் ஒரு கட்டி இருந்தது. அது கேன்சர் கட்டியாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனையில் பரிசோதனைகளை செய்தேன். அது சாதரண கட்டி தான். எனவே, சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதை தற்போது அகற்றிவிட்டர்கள். எனக்கு இப்போது எந்த பிரச்னையும் இல்லை. எனக்காக அன்புகாட்டும் ரசிகர்களுக்கு நன்றி' என்று கூறியுள்ளார். மேலும் பெண்கள் தங்கள் உடலில் இருக்கும் கட்டியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அட்வைஸும் செய்துள்ளார். அவர் நலமுடன் இருப்பது பற்றி தெரிந்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு, விரைவில் ஹேமா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.