பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
'ரோஜா' சீரியலில் ஹீரோவாக அர்ஜூன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிபு சூரியன். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான இவர், படங்களில் நடிக்க முயற்சி செய்து கடைசியாக தமிழ் சின்னத்திரையில் கால் பதித்தார். தனது திறமையான நடிப்பால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அர்ஜூனாக தமிழ் ரசிகர்கள் மனதில் நல்லதொரு இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், சிபு சூரியன் 'ரோஜா' சீரியலை விட்டு விலகப்போவதாக திடீரென அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் அவரை சீரியலை விட்டு வெளியேற வேண்டாம் என்று தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வந்தனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற சிபு சூரியன் சீரியலை விட்டு விலகும் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், 'என் ரசிகர்களின் அன்பினால் தான் நான் உருவானேன். அதற்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனவே, ரோஜா சீரியலில் இருந்து விலகும் எனது முடிவை மறுபரிசீலனை செய்து தொடர்ந்து உங்கள் அர்ஜூனாக தொடர்வேன்' என்று கூறியுள்ளார். இதனால் சிபு சூரியனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.