100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
வெள்ளித்திரையின் லெஜண்ட்ரி நடிகையான அர்ச்சனா சின்னத்திரை சீரியலில் முதன் முதலாக என்ட்ரி கொடுத்துள்ளார். ஜீ தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்துள்ள 'ராதாம்மா குதுரு' தொடர் தமிழில் 'மீனாட்சி பொண்ணுங்க' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த புத்தம் புதிய மெகா தொடரின் டைட்டில் ரோலில் தான் அர்ச்சனா நடிக்க உள்ளார். இதன் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளித்திரையில் யதார்த்த நடிகை என்று மிகவும் கொண்டாடப்பட்ட அர்ச்சனா, சீரியலில் என்ட்ரி கொடுத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதில் அர்ச்சனாவுடன் காய்த்ரி யுவராஜ் மற்றும் ப்ரணிகா தக்ஷூ நடிக்கின்றனர். இந்த தொடர் ஏனைய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.