அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மலையாள திரையுலக நடிகர் சங்கத்தின் (அம்மா) தலைவராக நடிகர் மோகன்லால் சில வருடங்களுக்கு முன்புதான் பொறுப்பேற்று இருந்தார். ஆனால் கடந்த வருடம் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதில் ஒரு சிலர் கைதான நிகழ்வுகளும் நடந்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் மோகன்லால் உள்ளிட்ட மொத்த நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அரசால் நியமிக்கப்பட்ட தற்காலிக குழு நடிகர் சங்க நிர்வாகத்தை கவனித்து வருகிறது. தேர்தல் நடத்தாமல் மீண்டும் ஒரு பொதுக்குழு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது, அல்லது தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது என இரண்டு வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று முன்தினம் நீண்ட நாளைக்கு பிறகு கூடிய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாக குழு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோகன்லால் மீண்டும் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை அந்த நிகழ்ச்சியிலேயே திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல நடிகர்களின் கோரிக்கையையும் நிராகரித்து தனது இந்த முடிவை உறுதிபட அறிவித்துள்ளார் மோகன்லால். இதனால் பொதுக்குழுவில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். மோகன்லாலின் இந்த முடிவை தொடர்ந்து இன்னும் மூன்று மாதங்களுக்குள் நடிகர் சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ தேர்தல் நடக்கலாம் என்று ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.