Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் சீசன்-6 மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்ஹாசன்

19 ஜூன், 2022 - 01:48 IST
எழுத்தின் அளவு:
Kamal-Haasan-is-hosting-Bigg-Boss-Season-6

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன். அதனை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியையும் முதல் மூன்று வாரங்கள் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். அதையடுத்து அவர் விக்ரம் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டதால், சிம்பு தொகுப்பாளராக தொடர்ந்தார். தற்போது கமல் நடித்து வந்த விக்ரம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில் பிக்பாஸ் ஆறாவது சீசனையும் கமல்ஹாசனை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அக்டோபர் 2ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 6 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. அதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய போட்டியாளர்களை தேர்வு செய்ய தொடங்கி விட்டதாகவும் விஜய் டிவி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சர்ச்சைகளுக்கு வாய் திறந்த நக்ஷத்திராவின் வருங்கால கணவர்சர்ச்சைகளுக்கு வாய் திறந்த ... ரீமேக் ஆகும் பெங்காலி சீரியல் ரீமேக் ஆகும் பெங்காலி சீரியல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)