சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
தமிழ் சேனல்களை பொறுத்தமட்டில் சீரியல்கள் மற்றும் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனமும் முன்னணி சேனல்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இரண்டு சீரியல்களை வாங்கி ஒளிபரப்புவதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கலர்ஸ் தமிழ் சேனல் பக்கம் திருப்ப முடியும் என முடிவெடுத்துள்ளது. இதற்காக ஏற்கனவே ஒளிபரப்பாகி ஹிட் அடித்த 'கோலங்கள்' மற்றும் 'தென்றல்' ஆகிய தொடர்களை மறுஒளிபரப்பு செய்யும் உரிமையை கலர்ஸ் தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி வருகிற 16ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 1 மணிக்கு கோலங்கள் சீரியலும், 2 மணிக்கு தென்றல் சீரியலும் ஒளிபரப்பாகவுள்ளது.