பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் வந்துவிட்டது. அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்று வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. இதற்கிடையில் போட்டியாளர்கள் மினிமம் கேரண்டியுடன் பணத்தை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து விலகும் வகையில் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்படும். சென்ற சீசனில் சரத்குமார் பணப்பெட்டி டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் 6 லட்சம் பணத்துடன் பணப்பெட்டி வீட்டினுள் இருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி பணப்பெட்டியை பார்த்துவிட்டு செல்கின்றனர். அதன்பிறகு அதிலிருக்கும் தொகை சிறிது சிறிதாக அதிகரித்து 8 லட்சமாக இருக்கிறது. சென்ற முறை ரசிகர்கள் பலரும் தாமரையை பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறும் படி அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், தாமரை இறுதிவரை விளையாடினார். இப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவிலும் தாமரை பணப்பெட்டியில் அக்கறை காட்டுவது போல் தெரியவில்லை. ப்ரோமோவின் முடிவில் ஜூலி மட்டும் 8 லட்சம் இருக்கும் பணப்பெட்டியின் முன் உட்கார்ந்திருக்கிறார். இந்நிலையில் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார்? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.