தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்து வந்தார் ஆல்யா மானசா. டிவி நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆல்யாவுக்கு ஏற்கனவே அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா சமீபத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சஞ்சீவ் அந்த குழந்தையை பாசத்தோடு வாங்கி கொஞ்சும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சீவ் மற்றும் ஆல்யா தம்பதியினர் குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர்.
இதற்கிடையில் பிரசவத்தின் காரணமாக ஆல்யா மானசா ராஜா ராணி 2 தொடரை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக ரியா என்ற நடிகை தற்காலிகமாக சந்தியாவாக நடிப்பார் என்றும் ஆல்யா சில தினங்களில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், குழந்தை பிறந்ததற்கு பின் ஆல்யாவிடம் ரசிகர்கள் பலரும் மீண்டும் எப்போது சந்தியாவாக நடிக்க வருவீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, 'ராஜா ராணி 2-ல் நான் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுக்கப்போவதில்லை. இனி ரியா தான் நிரந்தரமாக சந்தியாவாக நடிக்க போகிறார்' என பதிலளித்துள்ளார்.
முன்னதாக நிறைமாத கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்தில் ஆல்யா சீரியலை விட்டு விலகுவார் என்ற பேச்சுகள் எழுந்தது. அப்போது, ஆல்யா 'எப்போதும் ஒரே சந்தியா அது இந்த ஆல்யா' என்று பஞ்ச் டயலாக் பேசியிருந்தார். எனவே, ரசிகர்கள் பலரும் பிரசவம் முடிந்து ஆல்யா மீண்டும் நடிக்க வருவார் என்றே எதிர்பார்த்தனர். தற்போது ஆல்யாவின் இந்த பதிலால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.