டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சின்னத்திரை நடிகைகள் பலரும் நடிப்பு என்பதை தாண்டி பல்வேறு திறமைகளை வளர்த்து கொண்டு வருகின்றனர். வீஜே, குத்துச் சண்டை வீராங்கனை, மாடலிங், பட்டிமன்ற பேச்சாளர் என பலரும் நடிப்பு என்பதை தாண்டி ஏதோ ஒரு துறையில் தங்களை மெருகேற்றி வருகின்றனர். அந்த லிஸ்டில் தற்போது கோமதி ப்ரியாவும் இணைந்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ஓவியா என்ற தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமான கோமதி ப்ரியா, தற்போது விஜய் டிவியின் வேலைக்காரன் தொடரில் நடித்து வருகிறார். அவர் தற்போது புரொபஷனல் ப்ளேபேக் சிங்கராக ஒரு பாடலை பாடியுள்ளார். இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கோமதி ப்ரியா, 'ஆமாம், நண்பர்களே! நான் பாடல் பாடியுள்ளேன்' என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர் சினிமாவிற்கு பாடினாரா அல்லது ஆல்பம் எதிலும் பாடியிருக்கிறாரா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் கோமதி ப்ரியாவின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் பாக்ஸில் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.




