ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆஷா கவுடா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகையானது எப்படி என்ற சுவாரசியமான கதையை தற்போது கூறியுள்ளார்.
ஆஷா கவுடாவுக்கு முதலில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லையாம். அவரது குடும்ப உறுப்பினர் பலரும் ஜிம்மில் டிரெய்னராக இருந்து வந்ததால் இவருக்கும் பிட்னஸ் டிரெய்னராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்ததாம். சிறிது காலம் ஒரு ஜிம்மில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகவும் வேலை பார்த்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் இவரது சமூகவலைதளம் பேஜை பார்த்த சீரியல் குழுவினர் கதைக்கு பொருத்தமான நாயகி என ஆஷா கவுடாவை ஆடிஷனுக்கு அழைத்துள்ளனர். அங்கே அவரது பெர்மான்ஸ் பிடித்து போகவே அஷா கவுடா வசுந்தராவாக மாறினார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஆஷா கவுடாவுக்கு தமிழ் தெரியாது. ஆனால், கோகுலத்தில் சீதை தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் ஆஷா கவுடா இடம்பிடித்துள்ளார். தன் மேல் அன்பை காட்டும் தமிழ் மக்களின் பாசத்தை நினைத்து நெகிழும் அவர், 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி' என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.