டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா துராடி. விஜய் டிவியின் 'ஆயுத எழுத்து' தொடரில் நடித்த வந்த சரண்யா திடீரென தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அவர் 'வைதேகி காத்திருந்தால்' தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த தொடர் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் மனமுடைந்த சரண்யா தனது சமூகவலைதளத்தில், 'இந்த கடினமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி. உழைப்பை உதாசீனப்படுத்தும் போது மனது வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டும் வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் சில எபிசோடுகள் ஹீரோவாக நடித்து, நடித்த காட்சிகள் முழுதாக கூட வெளிவராத காரணத்தால் முன்னாவும் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
வைதேகி காத்திருந்தால் தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜின் சீரியலை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக முன்னா ரஹ்மான் ஹீரோவாக ஒரு சில எபிசோடுகள் நடித்து வந்த போதிலும், சீரியலை நிறுத்த தயாரிப்புக்குழு மற்றும் டிவி நிறுவனம் முடிவு செய்தது. இந்த தொடர் மொத்தமாக 37 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.




