விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சரண்யா ரவிச்சந்திரன். ஜெயில், பைரி, வெள்ளை யானை உள்ளிட்ட பல படங்களில் இரண்டாம் நாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஹீரோயின் ஆகியிருக்கும் படம் 'க.மு -க.பி' அதாவது கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின். இந்தப் படத்தை பிளையிங் எலிபென்ட்ஸ் எண்டர்டைன்மென்ட் சார்பில் புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரித்து, இயக்குகிறார்.
டாணாக்காரன், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விக்னேஷ் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். லப்பர் பந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த டிஎஸ்கே இந்த படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சின்னத்திரை புகழ் பிரியதர்ஷினி, கபாலி பெருமாள், அருவி பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.எம்.சுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம் கூறும்போது, “எப்போதும் காதலிக்கும் போது ஒருவருக்கொருவர் அவர்களது குறை நிறைகள் தெரியாது. பிளஸ் மட்டுமே தெரியும். ஈர்ப்புணர்வும் அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு சேர்ந்து இருக்கும் நேரம் அதிகம் என்பதால் அவர்களின் நிஜமான குணங்கள் தெரிய ஆரம்பிக்கும். பொருளாதார சமூக காரணங்கள் சேர்ந்து ஏதோ ஒரு விதத்தில் இருவருக்குமான ஈர்ப்பு குறைய காரணமாக அமைந்து விடும். இதை நான் லீனியர் பாணியில் சொல்லியிருக்கிறோம். இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு புரிதல் கொடுக்கக்கூடிய கொண்டாட்டமான படமாக இது இருக்கும்'' என்றார்.