ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மலையாள நடிகை நிகிலா விமல் மலையாள சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை தாண்டி தமிழிலும் சில நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றிவேல், கிடாரி, வாழை ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் நிகிலா விமல் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "நடிப்பு என்பது விளையாட்டு கிடையாது. என் மனப்பூர்வமான சம்மதம் இல்லாமல் எந்தவொரு கதாபாத்திரத்திலும், வசனத்திலும் நடிக்க மாட்டேன். இதில் நான் கவனமாக இருப்பேன். நான் கடுமையான பெண் அல்ல. எந்தவொரு காட்சியின் அவசியத்தை கேட்டு தான் நடிப்பேன். எனது கதாபாத்திரமும், படமும் நல்லபடியாக வரவேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டிருப்பேன். எளிய மக்கள் மத்தியில் நான் பிரபலமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.