நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
சமீபகாலமாக தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் நல்ல மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது. சின்ன சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படும் கதையுள்ள படங்கள் நன்கு ஓடி, தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கின்றன. தமிழ் ரசிகர்களின் ரசிப்புத்தன்மையையும் நல்ல தரத்தை நோக்கி கொண்டு செல்கின்றன.
முன்னுாறு கோடி, ஐநுாறு கோடி பட்ஜெட் படம் என்று பெருமை பேசி, பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் 100 கோடி 150 கோடிகளை கொட்டிக்கொடுத்து, அதையே ஒரு விளம்பரமாக்கி, படங்களை ஓட்டப் பார்ப்பது இயக்குனர்களின் வழக்கம். இந்த டெக்னிக் வேலை செய்யுமா செய்யாதா என்றெல்லாம் தெரியாத தயாரிப்பாளர்களின் தலையில் மிளகாய் அரைப்பார்கள் இதுபோன்ற இயக்குனர்கள்.
ஆனால் இந்த ஆண்டு என்னவோ தமிழ் திரையுலகில் சில மாற்றங்களை சில இயக்குனர்கள் கொண்டு வந்துள்ளனர். வித்தியாசமான கதைக்களங்களில் சாதாரண நடிகர்களை வைத்து, செலவே இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
குப்பையில் சில மாணிக்கங்கள்
இந்த ஆண்டு கடந்துபோன 10 மாதங்களில் 180 படங்கள் வெளிவந்தன. இதில் ‛‛ஸ்டார்'' (ரூ.7 கோடி பட்ஜெட்) , ‛‛கருடன்'' (ரூ.20 கோடி), ‛‛மகாராஜா'' (ரூ.25 கோடி), ‛‛கொட்டுக்காளி'' (ரூ.5 கோடி). ‛‛வாழை'' (ரூ.5 கோடி). ‛‛லப்பர் பந்து'' (ரூ.7 கோடி), ‛‛மெய்யழகன்'' (ரூ.35 கோடி), ‛‛பிளாக்'' (ரூ.15 கோடி) ஆகிய படங்கள் சில கோடிகளுக்குள் தான் தயாரிக்கப்பட்டன.
அதாவது, ஒரு பெரிய ஹீரோ ஒரு படத்தில் வாங்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு செலவு தான் மொத்த படத்திற்கும் ஆகியுள்ளது. ஆனால் வசூலானது நாலைந்து மடங்கு அதிகம். 100 ரூபாய் செலவழித்து 500 ரூபாய் பார்ப்பது சிறந்ததா அல்லது 1000 ரூபாய் செலவழித்து 1100 ரூபாய் பார்ப்பது சிறந்ததா என நாமே முடிவு செய்து கொள்ளலாம்.
சில தயாரிப்பாளர்கள் பெரிய ஹீரோக்கள் படங்களை ‛புரோமோட்' செய்வதற்கே பல கோடிகளை செலவழிக்கின்றனர். இந்த செலவில் கூட குட்டி பட்ஜெட் படங்களை எடுத்து விடலாம்.
யோசிக்கும் தயாரிப்பாளர்கள்
இப்படி பெரிய ஹீரோக்களை வைத்து பெருமைக்காக படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு தமிழ் சினிமாவின் சமீபத்திய இந்த போக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ‛‛ஏன் பல நுாறு கோடிகளை செலவழித்துவிட்டு படம் ஓடுமா ஓடாதா என்ற டென்ஷனில் இருக்க வேண்டும். ஒரு ஹீரோவுக்கு கொடுக்கும் சம்பளத்தில் சின்ன பட்ஜெட்டில் 4 படங்கள் எடுத்து விடலாம். நல்ல கதையுடன் காத்திருக்கும் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் என்ன'' என்று பெரிய தயாரிப்பாளர்கள் யோசிப்பதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி நடந்தால், தமிழ் சினிமாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். மக்களின் ரசனையும் செக்ஸ், வன்முறை போன்ற சீரழிவுகளில் இருந்து மாறி, ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகும்.