அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
பிரபல நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி புதிய தொடர் ஒன்றின் மூலம் சின்னத்திரைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். தமிழில் விஜய் டிவியின் 'பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமான ரச்சிதா தென்னிந்திய மொழிகளில் சீரியல்கள் நடித்து வந்தார். கடைசியாக 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நடித்து வந்த இவர் திடீரென சீரியலை விட்டு விலகினார். கன்னட மொழியில் 'ரங்கநாயகா' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படம் தள்ளிப்போனது.
இந்நிலையில், கலர்ஸ் தமிழ் சேனலில், 'சொல்ல மறந்த கதை' என்ற புதிய சீரியலில் நடிக்க ரச்சிதா மஹாலெட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அதன் போஸ்டர் லுக்குகள் தற்போது வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட சன் டிவியின் 'கயல்', ஜீ தமிழின் 'ரஜினி' சீரியல்களை போலவே 'சொல்ல மறந்த கதை' ரச்சிதாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதன் மோஷன் போஸ்டரை தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரச்சிதா, சமூகத்தில் தனது குழந்தையுடன் கணவர் துணை இல்லாமல் வசித்து வரும் பெண் பற்றிய கதை என குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள், புரோமோக்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.