ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
ஜீ தமிழ் டிவி பல புத்தம் புதிய தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் இப்போது கண்மணி மனோகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் புதிய சீரியலைத் தொடங்கியுள்ளது. இதற்கான புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் தாயின் மறைவால் படிப்பை நிறுத்திய அமுதா கல்விக்காக ஏங்கும் குணாதிசயங்களை உடையவராக உள்ளார். எனவே அமுதா தனது படிப்பைத் தொடரவும் தனது கனவுகளை அடையவும் ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள். ஆனால் அமுதாவுக்கு மட்டும் பெரிய கனவு இல்லை, இன்னொருவரும் கனவு காண்கிறார். அது என்ன என்பதை இந்த புரொமோ வீடியோ சித்தரிக்கிறது. நாயகனாக அருண் பத்மநாபன் நடிக்கிறார்.
"அமுதாவும் ______" என்ற தலைப்புக்கு பொருத்தமான பெயரை யூகித்துக்கொண்டே இருங்கள் மற்றும் நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விவரங்களை அறிய காத்திருங்கள்.