சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலைக்கு, அவரது துடுக்குத்தனமான ஆட்டிடியூட் மற்றும் பேச்சு சாமர்த்தியத்திற்காக பலரும் ரசிகர்களாக உள்ளனர். வீஜே கேரியரை ஸ்டார்ட் செய்த அவர், திருமணத்திற்கு பிறகு சிறு ப்ரேக் எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் இறங்கி அடித்து வருகிறார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனையடுத்து சில ஸ்பெஷல் ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபகாலங்களில் பட்டிமன்ற மேடைகளிலும் ஆக்டிவாக இருக்கும் தனது திறமையான தர்க்கத்தால் கைத்தட்டல்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது மாணவ பருவத்தில் பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனில், 'எப்போதுமே என் கையில மைக் இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார். மணிமேகலைக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். வீஜே பணிக்கும், பட்டிமன்ற மேடைக்கும் அவர் அவ்வளவு உழைப்பை செய்து வருகிறார். சிறுவயதிலிருந்தே தனக்கு பேசுவது மிகப்பிடிக்கும் என்பதை இந்த புகைப்படத்தின் மூலம் மணிமேகலை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.