அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, பவர்பாண்டி படத்தின் மூலம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். சின்ன கெஸ்ட் ரோல் என்றாலும், அவரது கதாபாத்திரம் பவர்பாண்டி படத்தில் நல்ல நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தற்போது முழுநேர நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். தனது முதல் பட அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், 'நடிகர் தனுஷ் பவர்பாண்டி படத்திற்கு நடிப்பதற்கு அழைத்த போது, பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும். மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்றால் நன்றாக இருக்கும். அதனால் தான் உங்களை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார். அவர் சொன்ன வார்த்தைகளால் தான், நான் திரைப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். அந்த திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தேன்.' என்று கூறியுள்ளார். திவ்யதர்ஷினி தற்போது துருவ நட்சத்திரம், ஜோஸ்வா போன்ற திரைப்படங்க்ளில் நடித்து வருகிறார்.