ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் ஆல் டைம் பேவைரட் ஷோவாக மாறியுள்ளது. தற்போது இதன் மூன்றாவது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நிகழ்ச்சியின் 10 கோமாளிகள் அறிமுகத்துடன் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து ரோஷினி, மனோபாலா, வித்யுலேகா போன்ற போட்டியாளர்களின் அறிமுக முடிந்தது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சூர்யாவுடன் ஸ்ரீ படத்தில் நடித்த கதாநாயகி ஸ்ருதிகா அறிமுக செய்யப்பட்டுள்ளார். ஸ்ருதிகா பழம்பெரும் மூத்த நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 17 வயதில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதிகா, ஸ்ரீ, ஆல்பம், தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பின் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய ஸ்ருதிகா, காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பெண் தொழிலதிபராகவும் பொறுப்பான அம்மாவாகவும், மனைவியாகவும் இருக்கும் அவர், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் குக் வித் கோமாளியின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.




