‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

விஜய் தொலைக்காட்சியில் பெரிய வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது இதன் 3வது சீசன் வருகிற 22ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள். இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடும் போட்டி நிலவுகிறது. நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில் சமீபத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிய ரோஷினி, நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், மனோபாலா, பாடகர் அந்தோணி தாசன், நடிகை வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், என 8 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, குரேஷி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக களமிறங்குகிறார்கள். வருகிற 22ம் தேதி துவங்கி வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.




