எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 மக்களின் பேராதரவுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது விறுவிறுப்பான டிக்கெட் டூ பினாலே ரவுண்டு நடைபெற்று வருகிறது. இந்தவாரத்திற்கான எபிசோடில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இருவரும் தங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும் போதும், மேட்ச் நடக்கும் போது இடைவெளியிலும் குக் வித் கோமாளி பார்ப்பதாக கூறியுள்ளனர். இதன் புரோமோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.