டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
தொலைக்காட்சி தொகுப்பாளினியான பரீனா, 'பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமாகி கலக்கி வருகிறார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்ததையடுத்து சில நாட்கள் சீரியலுக்கு கேப் விட்டிருந்த அவர், சீரியலில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பார்மில் வந்துள்ளார். அதற்கேற்றார் போல் பரீனாவின் மார்க்கெட்டும் எகிறி உள்ளது.
பரீனா தற்போது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ப்ரைம் டைம் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ரேஷ்மா - மதன் இணைந்து நடிக்கும் ஹிட் தொடரான 'அபி டெய்லர்' தொடரில் ஃபரீனா நடித்து வருகிறார். இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 'அபி டெய்லர்' தொடரில் சமீப காலமாக பல நடிகர்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பரீனாவும் என்ட்ரி கொடுத்துள்ளதால் சின்னத்திரை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.