தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் |
பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா சுற்றுலாவை முடித்து கொண்டு மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார். இனியா தொடர் முடிந்த பின் குடும்பத்துடன் சர்வதேச சுற்றுலா சென்ற அவர், கேரளாவில் 2 கோடி ரூபாய்க்கு போட் ஹவுஸ் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் மீண்டும் எப்போது நடிக்க வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து அவரிடமே கேள்விகள் கேட்டு வந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டானதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தான் கமிட்டான சீரியல் எந்த சேனல் மற்றும் எந்த ஸ்லாட் போன்ற விவரங்களை ரசிகர்களையே யூகிக்க சொல்லியிருக்கிறார். இதனால் ஆல்யாவின் ரசிகர்கள் அவரது புதிய சீரியல் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.