காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கண்மணி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் சாம்பவி. தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள சாம்பவி, ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அந்த சாப்பாட்டை அவர் சாப்பிடும் போது ப்ளாஸ்டிக் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்ட அவர், ஒரு வழியாக பெரிய ஆபத்தில்லாமல் ப்ளாஸ்டிக் துண்டை வெளி எடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த குறிப்பிட்ட ஹோட்டலிலோ அல்லது மற்ற ஹோட்டலிலோ சாப்பாடு ஆர்டர் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கும் படி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார்.