‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பொங்கல் பண்டிகை என்றாலோ பொங்கல், சூரிய நமஸ்காரம் கரும்பு, ஜல்லிக்கட்டு இவற்றுடன் இணைந்தது சினிமா. ஆனால் கொரோனா பரவலுக்கு பிறகு பொங்கல் பண்டிகையே களை இழந்து விட்ட நிலையில் சினிமா பொங்கலில் இருந்து விலகி விட்டது.
பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்த வலிமை உள்ளிட்ட பெரிய படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சில சிறிய அல்லது மீடியம் பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகலாம் என்று தெரிகிறது. என்றாலும் சின்னத்திரையில் பொங்கல் சிறப்பு படங்கள் வழக்கம்போல களை கட்டுகிறது.
ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை, படத்தை தயாரித்த நிறுவனம் நடத்தும் சேனலில் பொங்கல் அன்று, அதாவது வருகிற 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். கொல்கத்தா அண்டர்கிரவுண்ட் தாதாக்களிடம் சிக்கிய தங்கையை கிராமத்து அண்ணன் காப்பாற்றுகிற கதை.
இதுதவிர கலைஞர் தொலைக்காட்சி சேனலில் 14ம் தேதி பகல் 1.30 மணிக்கு அரண்மனை 3 ஒளிப்பாகிறது. அரண்மணைக்குள் அடைந்து கிடக்கும் பேயை விரட்ட காமெடி கும்பல் நடத்தும் கலாட்டாக்கள்தான் கதை. ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு நடித்திருந்தனர். சுந்தர்.சி இயக்கி இருந்தார்.
15ம் தேதி மாலை 6.30 மணிக்கு சூர்யா தயாரித்து, நடித்த ஜெய் பீம் ஒளிபரப்பாகிறது. லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன், ரஜிதா விஜயன் நடித்திருந்தார்கள். ஷான் ரோல்டன் இசை அமைத்திருந்தார். த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். போலீஸ் லாக்அப்பில் கொல்லப்பட் இருளர் இன இளைஞரின் கதை.
16ம் தேதி பகல் 1.30 மணிக்கு சார்பட்டா பரம்பரை ஒளிபரப்பாகிறது. பா.ரஞ்சித் இயக்கிய இந்த படம் வடசென்னையில் 80களில் இருந்த குத்துசண்டை பரம்பரைகளின் மோதல் கதை. இதில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், கலையரசன், சந்தோஷ் பிரதாப் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.




