சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மியூசிக் சேனல் ஒன்றில் 'கட்டம் என்ன சொல்லுது' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் அனன்யா. அதன்பின் கலர்ஸ் தமிழ் சேனலில் வந்தாள் மஹாலட்சுமியே என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் பலரும் அறிந்த பிரபலமாக உருவெடுத்தார். இவரது சிரித்த முகத்திற்கும் கலகலப்பான பேச்சுக்கும் பலரும் ரசிகர்களாக உள்ளனர். சீரியல் முடிந்து விட்ட நிலையில் பலரும் அனன்யாவின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த அப்டேட்டினை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அனன்யாவோ தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறேன் என டாட்டா காட்டிவிட்டார்.
அனன்யா, தமிழ் என்பவரை காதலித்து வருகிறார். தமிழ் ஆஸ்திரேலியாவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். லவ் கம் அரேன்ஜ் மேரேஜாக மாப்பிள்ளையின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சியில், அனன்யா-தமிழ் திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது. கல்யாணத்தை சிம்பிளாக ப்ளான் செய்ததால் அனன்யா தனது மீடியா நண்பர்களை அழைக்கவில்லையாம். ஆனால், அவரது திருமண புகைப்படங்களும், மாலை மாற்றும் விளையாட்டும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பின் அனன்யா ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில் இனி அவர் பிறகு நடிக்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது.