'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி | முன்னாள் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கரிஷ்மா கபூர் | 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! | 'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன் | விக்ரம்பிரபு பட விழாவில் ஆதிக்ரவிச்சந்திரன் | 'பறந்து போ' படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ஜூன் 24ல் ரிலீஸ்! | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் கூலாக இருந்த விஜய்! - மமிதா பைஜூ சொன்ன தகவல் | கமலிடம் நஷ்ட ஈடு கேட்கும் 'தக்லைப்' படத்தின் கர்நாடக விநியோகஸ்தர்! | 50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' |
வெள்ளித்திரை நடிகையான ராஜஸ்ரீ தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கருத்தம்மா படம் தமிழ் திரையுலகில் மிக முக்கிய படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அந்த படத்தின் டைட்டில் ரோலில் நடித்த ராஜஸ்ரீ அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார். அவர் தற்போது கலர்ஸ் தமிழின் ஹிட் தொடரான சில்லுனு ஒரு காதல் தொடரில் கல்பனா தேவி எனும் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் ஏற்கனவே வில்லி கதாபாத்திரங்களில் நடித்த ராஜஸ்ரீ தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ராஜஸ்ரீ தமிழில் முன்னதாக 'கங்கா யமுனா சரஸ்வதி', ‛அகல் விளக்குகள்', 'வம்சம்', 'மகள்', 'சித்தி' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.