ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பின் சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார். வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் முன்னாள் நடிகை கே.ஆர்.விஜயா. அதிலும் அம்மன் வேடத்தில் அவருக்கு நிகரான நடிகை வேறு யாருமில்லை என சொல்லும் அளவிற்கு வெள்ளித்திரையில் பல படங்களில் அம்மனாக நடித்து ரசிகர்களை பக்தி பரவசத்தில் மூழ்க செய்வார். சமீப காலங்களில் திரையுலகையும், நடிப்பையும் விட்டு ஒதுங்கியிருந்த கே.ஆர்.விஜயா தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரை சீரியலில் நடிக்கிறார். அன்பே வா என்ற தொடரில், உயிருக்கு போராடி வரும் கதாநாயகனை காப்பாற்ற வரும் அம்மனாக கே.ஆர்.விஜயா நடிக்கிறார். அம்மன் செண்டிமென்ட் சீரியலிலும், சினிமாவிலும் எப்போதும் சக்ஸல் பார்முலாவாக இருந்து வருவதால் கே.ஆர்.விஜயாவின் என்ட்ரி அன்பே வா சீரியலின் டிஆர்பியை எகிறச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.