சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகை வனிதா விஜயகுமாரிடம் நடிகரும், டாக்டருமான சீனிவாசன் கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்த வனிதா விஜயகுமார் தற்போது சீனிவாசன் உடன் வெள்ளித்திரையில் புதிய படமொன்றில் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு சோஷியல் மீடியாவை அலறவிட்டு வருகின்றனர். சமீபத்தில் இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீனிவாசனை பார்த்து வனிதா, 'என்னாச்சு உங்களுக்கு?' என்று கேட்க அதற்கு அவர் 'ரொம்ப முடியலம்மா. ஓவர் பிரஷர். தலைவேற சுத்துதும்மா. நீ பக்கத்துல இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும். என் கூட கடைசி வரை இரும்மா. அப்பதான் பிரஷர் குறையும்' என்று கெஞ்சுகிறார். மேலும் அந்த வீடியோவில் 'நீங்க பாட்டுக்கு போய் ஹாஸ்பிட்டல படுத்த்துட்டா நான் குஷ்பு மாதிரி ஓடி வர முடியுமா'? என்று வனிதா கூற. அதற்கு, 'நான் எங்க படுத்தாலும் நீங்க எங்க இருந்தாலும் பறந்து வருவீங்கன்னு நினைச்சு ஒரு பீலிங்குல படுத்துட்டேன்மா' என்று நக்கலாக கூறுகிறார். இந்த ஜோடியின் காமெடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.