சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கரின் உடல்நலம் நன்றாக தேறி வருகிறது. இந்நிலையில் அவர் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நட்சத்திர பேச்சாளரான பாரதி பாஸ்கர் அன்மையில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பாரதி பாஸ்கர், 'மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக 22 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளேன். உடல்நலம் நன்றாக தேறி வருகிறது. எல்லா மதங்களையும் கடந்து எல்லோரும் எனக்காக பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அனுப்பிய கோவில் பிரசாதங்கள் மலை போல் குவிந்துள்ளது. உங்களுக்காக நான் எதுவுமே செய்ததில்லை. ஆனால் நான் உங்களுடன் தமிழில் பேசியிருக்கிறேன். தமிழ் உங்களையும் என்னையும் இணைத்துள்ளது. இரண்டாவது முறை கிடைத்த இந்த வாழ்க்கை இன்னும் அழகாக மாறியிருக்கிறது. முழுமையாக உடல்நலம் தேறி விரைவிலேயே மேடைக்கு வருவேன் என நம்புகிறேன். இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. சிறு வார்த்தையில் நன்றி என இதை சொல்லிவிட முடியாது. மீண்டும் சந்திப்போம்' என உருக்கமாக பேசியுள்ளார்.
பாரதி பாஸ்கரின் உடல்நலம் முழுதாக குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.