'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
சென்னைவாசியான லீஷா எக்லைர்ஸ் மாடலிங் துறையில் பிஸியாக இருந்து வந்த காலக்கட்டத்தில் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. லீஷா தமிழில் 'பலே வெள்ளையத்தேவா','பொது நலன் கருதி','மடை திறந்து' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். எனினும் அவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது என்னவோ சீரியல் தான். லீஷா, கண்மணி தொடரில் நாயகியாக நடித்திருந்தார். அந்த தொடர் லீஷாவை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சென்று பிரபலமாக்கியது.
தொடர்ந்து சினிமாவிலும், சின்னத்திரையிலும் சரியான வாய்ப்பிற்காக காத்திருந்த அவர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக டான்ஸ், மாடலிங் என ஹாட்டான பதிவுகளால் ரசிகர்களை பெருக்கிக்கொண்டார். தற்போது அவருக்கு தெலுங்கில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட லீஷா, அவர் நடிக்கும் படத்திற்கு ரைட் என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பலரும் தங்களது வாழ்த்துகளை லீஷாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.