டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சின்னத்திரையில் நாயகன்/ நாயகிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த வனிதா ஹரிஹரனின் முகத்தை யாரும் மறந்துவிட முடியாது. வெள்ளித்திரையிலும் கால்பதித்த வனிதா 'டார்லிங்' மற்றும் 'செஞ்சிட்டாலே என் காதல' ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மகராசி சீரியலில் ராகிணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் திடீரென தொடரை விட்டு விலகினார். அதன்பின் கணவருடன் பெல்ஜியம் சென்று விட்ட வனிதா தற்போது கர்ப்பமான வயிறுடன் இந்தியா திரும்பியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சீரியலில் நடிக்காததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் வனிதா, 'எங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆகிடுச்சு. என்னுடைய கேரியருக்காக குழந்தை பெத்துக்கிறத கொஞ்சம் தள்ளிப்போட்டோம். இப்ப குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்ததால சீரியலிலிருந்து விலகிட்டேன். நான் நடிச்சிட்டு வந்தது வில்லி கேரக்டர். அது நடிப்பா இருந்தா கூட என்னுடைய குழந்தைய பாதிச்சிடக் கூடாதுன்னு தான் நான் சீரியலிலிருந்து வெளியேறினேன்' என அவர் கூறியுள்ளார்.
வனிதா ஹரிஹரனுக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க ரசிகர்கள் அனைவரும் தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




