Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் சீசன் 5 துவங்கியது : 18 போட்டியாளர்கள் பங்கேற்பு

03 அக், 2021 - 06:44 IST
எழுத்தின் அளவு:
Biggboss-5-tamil-begins

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதன் இன்று(அக்., 3) ஆரம்பமானது. நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கானா பாடகி இசைவாணி என்பவர் உள்ளே சென்றார். தொடர்ந்து சின்னத்திரை கலைஞர்கள், மாடலிங்கில் இருப்பவர்கள், சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள், நாட்டுபுற பின்னணி பாடகி, மேடை நாடக கலைஞர், விஜேக்கள் மற்றும் திருநங்கை ஒருவர் என பல கலவைகளாக இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் போட்டியின் முதல்நாளே பங்கேற்றுள்ளனர்.




பிக்பாஸ் வீட்டில் என்ன புதுசு

முன்னதாக நிகழ்ச்சி துவங்கும் போது பிக்பாஸ் வீட்டில் இந்த முறை என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை கமலே பிக்பாஸ் வீட்டினுள் சென்று காண்பிப்பது போன்ற வீடியோ வெளியிடப்பட்டது. இந்த முறை பிக்பாஸ் வீட்டில் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி இன்டீரியர் வேலைகளை அமர்க்களமாக செய்துள்ளனர். பிக்பாஸ் வீட்டின் கார்டன் ஏரியாவில் இருந்த ஜிம் இல்லை, சிறைச்சாலை இல்லை. இந்த முறை சிறைக்கு பதிலாக நீச்சல் குளத்தை பாதாள சிறையாக மாற்றி உள்ளனர். அதேப்போன்று உள்ளே நுழைந்ததும் வரவேற்பு அறை ஒன்றை உருவாக்கி உள்ளன. குறிப்பாக நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் இந்த பிக்பாஸ் 5 வீடு அமைக்கப்பட்டுள்ளது.




01. இசைவாணி

நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கானா பாடகி இசைவாணி என்பவர் உள்ளே சென்றார். சென்னை துறைமுகம் பகுதியை சேர்ந்த இவர் கானா பாடகியாக உள்ளார். பல்வேறு மேடை கச்சேரிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கானா பாடல்களை பாடி வருகிறார். எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் தான் கடைசியாக தான் பாடுவேன் என அறிமுக நிகழ்ச்சியின்போது கூறினார் இசைவாணி. அதனால் தான் அவரை போட்டியின் முதல் ஆளாக உள்ளே அனுப்பி உள்ளோம் என கமல் கூறினார்.




02. ராஜூ ஜெயமோகன்

நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக நடிகர் ராஜூ ஜெயமோகன் உள்ளே சென்றார். நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வரும் இவர் மிமிக்கிரி கலைஞரும் கூட. நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனக்கு புகழ் கிடைக்கும் என்பதாலேயே உள்ளே வந்ததாக கூறினார்.




03. மதுமிதா ரங்கநாதன்

நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த இலங்கை வாழ் தமிழரான மதுமிதா ரங்கநாதன் உள்ளே சென்றார். ஐடி., துறையில் வேலை பார்க்கும் இவர் மாடலிங் மற்றும் ஆடைவடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ‛‛முதல் சீசனில் இருந்தே தான் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருவதாகவும், தன்னை பற்றி தானே தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும், மாடலிங் மற்றும் சினிமா துறைக்கு வர விரும்புவதாகவும் மதுமிதா கூறினார்.




04. அபிஷேக் ராஜா

நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளராக அபிஷேக் ராஜா உள்ளே சென்றார். தொகுப்பாளராக தனது பயணத்தை துவக்கிய இவர் பிரபல எப்எம் ரேடியோக்களிலும், இணையதளங்களிலும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். டிவி சேனல் ஒன்றிலும் இவர் தொகுப்பாளராக பணியாற்றினார். தனியாக யு-டியூப் சேனல் வைத்திருக்கும் இவர் சினிமா விமர்சகராகவும் தன்னை மக்கள் மனதில் பிரபலமாக்கி கொண்டார்.




05. நமிதா

நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியாளராக திருநங்கை நமிதா உள்ளே சென்றார். இந்திய மற்றும் சர்வதேச திருநங்கைக்கான போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளார். திருநங்கைகளுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். நான் யார் என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்க முயல்வேன் என்றார் நமிதா.




06. வி.ஜே.பிரியங்கா

நிகழ்ச்சியின் 6வது போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி பிரியங்கா உள்ளே சென்றார். விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியான இவர் இதுநாளை வரை இந்த டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது இவரே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றார். ‛‛எந்த டார்க்கெட்டும் இல்லை, ஒரு அனுபவம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போறோம் 10 நாளோ, 100 நாளோ சில் பண்றோம், என்ஜாய் பண்றோம் என்றார் பிரியங்கா.




07. அபினய்

நிகழ்ச்சியின் 7வது போட்டியாளராக நடிகர் அபினய் பிக்பாஸ் வீட்டினுள் சென்றார். ராமானுஜன், சென்னை 28-2 போன்ற படங்களில் நடித்துள்ள இவர் சினிமாவில் தனக்கான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி கொண்டுள்ளார்.




08. பவணி ரெட்டி

நிகழ்ச்சியின் 8வது போட்டியாளராக நடிகை பவணி ரெட்டி பிக்பாஸ் வீட்டினுள் உள்ளே சென்றார். சில படங்களில் நடித்துள்ள இவர் ரெட்டைவால் குருவி, பாசமலர், சின்னதம்பி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது இவரும் பிக்பாஸ் வீட்டினுள் சென்றுள்ளார்.




09. சின்னப்பொண்ணு

பிக்பாஸ் வீட்டினுள் 9வது போட்டியாளராக பிரபல பாடகி சின்னப்பொண்ணு உள்ளே சென்றார். நாட்டுப்புற பாடகியான இவர் சினிமாவில் நாக்கமுக்க பாடல் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களிலும், மேடை கச்சேரிகளில் பாடி உள்ள இவர் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார்.




10. நடியா சங்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது போட்டியாளராக மலேசியாவை சேர்ந்த நடியா சங் உள்ளே சென்றார். மாடலிங் துறையை சேர்ந்த இவர் டிக் டாக் ஆப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இப்போது இந்த நிகழ்ச்சியை தனக்கு நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.




11. வருண்

நிகழ்ச்சியின் 11வது போட்டியாளராக நடிகர் வருண் உள்ளே சென்றார். வேல் பிலிம்ஸ் ஐசரி கணேஷின் உறவினரான இவர் போகன், கோமாளி, பப்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.




12. இமான் அண்ணாச்சி

நிகழ்ச்சியின் 12வது போட்டியாளராக நடிகர் இமான் அண்ணாச்சி உள்ளே சென்றுள்ளார். ஆரம்ப காலங்களில் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குறிப்பாக மழலைகளை வைத்து இவர் செய்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம். தொடர்ந்து வெள்ளத்திரையிலும் அசத்தி வரும் இவர் இந்த நிகழ்ச்சியினுள் சென்றுள்ளார்.




13. ஸ்ருதி ஜெயதேவன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது போட்டியாளராக ஸ்ருதி ஜெயதேவன் சென்றுள்ளார். மாடலிங் துறையை சேர்ந்த இவர் இந்த போட்டியில் களமிறங்கி உள்ளார்.




14. அக்ஷரா ரெட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14வது போட்டியாளராக நடிகை அக்ஷரா ரெட்டி உள்ளே சென்றுள்ளார். மாடலான இவர் ஏராளமான மாடலிங் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். இப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.




15. ஐக்கி பெர்ரி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது போட்டியாளர் ஐக்கி பெர்ரி. தஞ்சாவூர் தமிழச்சியான இவர் ஒரு ராப் பாடகர், பாடல் எழுதுபவர். எல்லாற்றுக்கும் மேலாக இவர் ஒரு காஸ்மெட்டிக் சர்ஜன் ஆவார். இவரும் இந்த போட்டியில் ஒரு போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.




16. தாமரை செல்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது போட்டியாளர் தாமரை செல்வி. திண்டுக்கல்லை சேர்ந்த மேடை நாடக கலைஞர். பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இவரும் இந்த போட்டியில் களமிறங்கி உள்ளார்.




17. மாஸ்டர் புகழ் சிபி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக நடிகர் சிபி உள்ளே சென்றுள்ளார். குறும்படங்களில் நடித்துள்ள இவர் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார்.




18. நிரூப்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது போட்டியாளராக நிரூப் பங்கேற்றுள்ளார். இவர் ஒரு தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர். சினிமா ஆசையால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதற்கு இந்த மேடை உதவும் என நம்புகிறேன் என்றார் நிரூப்.


இனி அடுத்த 100 நாட்களுக்கு இந்த பிக்பாஸ் வீட்டினுள் எத்தனை சண்டைகள், அழுகைகள், உணர்வுப்பூர்வ காட்சிகள், மகிழ்ச்சியான தருணங்கள், காதல் மாதிரியான அரங்கேற்றங்கள் என என்னென்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தரையில் இருந்து மெத்தைக்கு தாவும் வீடியோவை வெளியிட்ட அஞ்சலிதரையில் இருந்து மெத்தைக்கு தாவும் ... சன்னி லியோன் புகழ்பாடும் சதீஷ் சன்னி லியோன் புகழ்பாடும் சதீஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in