டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ராஜா ராணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தொடர்ந்து 3 வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் அட்லீ நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அட்லீ பிறந்தநாள் விழாவில் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.




